/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமுருகன் எம்.எல்.ஏ., முதல்வரிடம் ஆசி
/
திருமுருகன் எம்.எல்.ஏ., முதல்வரிடம் ஆசி
ADDED : மார் 06, 2024 03:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமுருகன் எம்.எல்.ஏ., முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார்.
காரைக்கால் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., திருமுருகன். இவர் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அரசாணை நேற்று வெளியானது. நேற்று மாலை புதுச்சேரி வந்த அவர், திலாசுப்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு எலுமிச்சை பழம் வழங்கி முதல்வர் ஆசி வழங்கினார்.

