தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனிப்பெயர்ச்சிக்கு திருநள்ளாறு தயார் : நளன் குளத்தில் நீர் நிரப்பப்பட்டது

 சனிப்பெயர்ச்சிக்கு திருநள்ளாறு தயார் : நளன் குளத்தில் நீர் நிரப்பப்பட்டது

 சனிப்பெயர்ச்சிக்கு திருநள்ளாறு தயார் : நளன் குளத்தில் நீர் நிரப்பப்பட்டது


ADDED : பிப் 25, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு சனி பகவான் கோவில் நளன் குளத்தில் பக்தர்கள் நீராட தண்ணீர் நிரப்பப்பட்டது.

புதுச்சேரி, காரைக்கால், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில் இது சனி பரிகார ஸ்தலமாகும். வரும் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சியையொட்டி, அன்று காலை 8:24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீனராசிக்கு பிரவேசிக்கிறார். இதையொட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சனி பகவானை தரிசனம் செய்வதற்கு முன் நளன் குளத்தில் நீராடி அருகில் உள்ள விநாயகர் கோவிலில் தோங்காய் உடைத்து வழிப்பட்ட பின், தர்பாரண்யேஸ்வரர், முருகர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை வழிப்பட்டு, சனி பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.

இதனால் பக்தர்கள் நீராடும் நளன் குளத்தில் உள்ள நீர் மோட்டர் மூலம் அகற்றப்பட்டது. குளத்தை துாய்மைப்படுத்தும் பணிகள் முடிந்தது. தற்போது பக்தர்கள் குளிப்பதற்காக நீர் நிரப்பப்பட்டது. மேலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு நளன் குளத்தை சுற்றியுள்ள கழிப்பறைகள், உடைமாற்றும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us