/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி
/
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவக்கி மோசடி
ADDED : பிப் 09, 2025 09:39 AM

புதுச்சேரி: திறுநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் பெயரில் போலி இணையதளம் துவங்கி, அதில் கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் உள்ளனர். இக்கோவிலுக்கு என தனி இணையதளம் உள்ளது. அதில், ஆன்லைனில் புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது.
இந்நிலையில், திருநள்ளாறு கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் போல், போலியாக இணையதளம் துவங்கி அதில், தரிசனம், பூஜை விவரங்கள், அது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு பண மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த இணையதளத்தை நம்பிய பலர் சிறப்பு பூஜை, சாமி தரிசனம், அர்ச்சனை, அபிஷேகத்திற்கு என பணம் செலுத்தி உள்ளனர். வெளிநாட்டவர்களிடம் டாலர் கணக்கில் பணம் வசூலித்தனர். இந்த வகையில் கோடிக்கணக்கில் பணம் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த இணையதளத்தை உருவாக்கியது யார். பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.