பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பவித்ரோற்சவம் துவக்கம்
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பவித்ரோற்சவம் துவக்கம்
UPDATED : ஆக 05, 2026 09:11 PM
ADDED : ஆக 05, 2026 08:53 PM
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், திருப்பவித்ரோற்சவம் நிகழ்ச்சி ஆகஸ்ட் 7 ல் துவங்கி வரும் 11ம் தேதி வரை நடக்கிறது.
புதுச்சேரி - திண்டிவனம் சாலை, பஞ்சவடீயில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 5 நாட்கள் நடக்கும் திருப்பவித்ரோற்சவம் நிகழ்ச்சி நாளை (7ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பூர்வாங்க பூஜைகளுடன் துவங்குகிறது.
அதனைத் தொடர்ந்து, வரும் 8ம் தேதி காலை 7:00 மணிக்கு புண்யாஹவாசனம், மகாசாந்தி ஹோமம், திருவாராதனம், சாற்றுமுறை நடக்கிறது. 9ம் தேதி நித்ய ேஹாமம், பிரதான ேஹாமம், 10ம் தேதி புண்யாஹவாசனம், பூர்ணாஹூதி, திருவாராதனம் நடக்கிறது.
11ம் தேதி காலை 7:00 மணிக்கு நித்ய ேஹாமம், யாகசாலையில் பூர்ணாஹூதி பூர்த்தியாகி, யாத்தராதானம், சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் மற்றும் தீர்த்தவாரி, 12:00 மணிக்கு பவித்ர மாலைகள் களைதல், சிறப்பு திருவாராதனம், சாற்றுமுறையை அடுத்து பிரசாதம் வழங்கப்படுகிறது.
