/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை கொலை வழக்கு : 8 பேர் விடுதலை
/
திருபுவனை கொலை வழக்கு : 8 பேர் விடுதலை
ADDED : ஏப் 06, 2025 07:57 AM
புதுச்சேரி : என்.ஆர்.காங்., பிரமுகர் வேலழகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
புதுச்சேரி, திருபுவனை சின்னப்பேட்டையை சேர்ந்தவர் வேலழகன்,44; என்.ஆர்.காங்., பிரமுகர். லேபர் கான்ட்ராக்டரான இவர், கடந்த 2017ம் ஆண்டு ஏப்., 19ம் தேதி, இரவு சன்னியாசிக்குப்பத்தில் உள்ள அவரது குடோன் அருகே மர்ம கும்பலால் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில், புதுச்சேரி உதயகுமார்,52; ரத்தினவேல்,53; சன்னியாசிகுப்பம் செங்கதிரவன்,52; கார்த்திகேயன் (எ) ரமேஷ்,44; வெங்கட்டா நகர் சிவராமன் (எ) சிவராமகிருஷ்ணன்,33; கலிதீர்த்தாள்குப்பம் ஜனா (எ) ஜனார்த்தனன்,37; கொத்தபுரிநத்தம் கார்த்தி (எ) கார்த்திகேயன்,29; பூபாலன்,33; ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு, புதுச்சேரி 2வது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், வழக்கில் குற்றம் நிருபிக்கப்படாததால், 8 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.

