திருவள்ளுவர் மொழிப்போர் வீரர் விருது வழங்கும் விழா
திருவள்ளுவர் மொழிப்போர் வீரர் விருது வழங்கும் விழா
ADDED : பிப் 02, 2026 03:26 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் மொழிப்போர் வீரர் விருது மற்றும் பொறிகிழி வழங்கும் விழா நடந்தது.
தமிழ்ச்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலர் தினகரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில், அமைச்சர் லட்சுமி நாராயணன், முன்னாள் சட்டத்துறை செயலர் வயி நாராயணசாமிக்கு திருவள்ளுவர் விருது மற்றும் ரூ. 10 ஆயிரம் -பொற்கிழி வழங்கினார்.
இதில், முன்னாள் நீதிபதி முருகபூபதி வாழ்த்தி பேசினார். முனைவர் பூங்குழலி பெருமாள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ராஜா, உசேன், ஆனந்தராசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
