தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருவாரூர் ரயில் நடுவழியில் நிறுத்தம் விழுப்புரம் அருகே பயணிகள் அவதி

திருவாரூர் ரயில் நடுவழியில் நிறுத்தம் விழுப்புரம் அருகே பயணிகள் அவதி

திருவாரூர் ரயில் நடுவழியில் நிறுத்தம் விழுப்புரம் அருகே பயணிகள் அவதி


ADDED : அக் 05, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே நடு வழியில் ரயில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

திருவாரூரில் இருந்து நேற்று காலை விழுப்புரத்திற்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. இந்த ரயில், பண்ருட்டி - விழுப்புரம் இடையே ரயில் வந்து கொண்டிருந்த நிலையில், காலை 8:30 மணிக்கு, ், சேர்ந்தனுார் ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்களுக்கு மேலாகியும், ரயில் புறப்படாததால் பொறுமையிழந்த பயணிகள், ரயில் நிலைய அதிகாரியிடம், அலுவலகம் செல்ல நேரமாவதாக முறையிட்டனர்.

அதனையொட்டி, காலை 9:40 மணிக்கு மன்னார்குடியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற, பாமனி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி, திருவாரூர் ரயிலில் இருந்த பயணிகளை அதில் ஏற்றி விழுப்புரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வழக்கமாக திருவாரூர் ரயில் காலை 9:15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். நேற்று மாற்று ரயிலில் வந்ததால், பயணிகள் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 10:20 மணிக்கு விழுப்புரத்திற்கு வந்தடைந்தனர். முன்னறிவிப்பின்றி ரயிலை நிறுத்துவதால், தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us