/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தாலம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
முத்தாலம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : பிப் 03, 2024 07:46 AM

புதுச்சேரி : எறையூர் முத்தாலம்மன் கோவிலில் நேற்று ஸ்ம்வத்ஸர அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் வட்டம், திருவக்கரை அருகே உள்ள 300 ஆண்டுகள் பழமையான முத்தாலம்மன் கோவிலில், ஸ்ம்வத்ஸர அபிஷேகம் (ஆண்டு விழா) மற்றும் உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை நேற்று விமர்சையாக நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 6:00 மணி முதல், கோ பூஜை, சூரிய பூஜை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வேதபாராயணமும், பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
காலை 10:00 மணிமுதல் திருவிளக்கு பூஜை துவங்கியது. இதில், 230 பெண்கள் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தங்களின் மன குறைகள் கலையவும் அம்மனுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.
மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து தீபாராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் , வாண வெடிக்கையுடன் அம்மன் வீதியுலா நடந்தது.
ஸ்ம்வத்ஸர பூஜைகள் மற்றும் திருவிளக்கு பூஜைகளை எடையார் ஞானஸ்கந்த சுவாமி, சந்திரமவுலி ஆகியோர் நடத்தி வைத்தனர். விழா ஏற்பாடுகளை எறையூர் கிராம மக்கள் மற்றும் குல தெய்வ உபயதாரர்கள் செய்திருந்தனர்.

