/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இதுவா மாநில வளர்ச்சி; கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்
/
இதுவா மாநில வளர்ச்சி; கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்
இதுவா மாநில வளர்ச்சி; கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்
இதுவா மாநில வளர்ச்சி; கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்
ADDED : மார் 08, 2024 06:43 AM

அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் அகில இந்திய துணை தலைவர் சுதா சுந்தரராமன்:
புதுச்சேரி மாநில முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. இது இளைய சமுதாயத்தை திசை திருப்பி வேறு பாதையில் கொண்டு சென்றுவிட்டது.
அதன் உச்சக்கட்டமாக சிறுமியின் கொடூர கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தர வேண்டும். ரேஷன் கடைகளை திறக்காத புதுச்சேரி அரசு, ரெஸ்ட்ரோ பார்களை திறந்து கலாசாரத்தை சீரழிக்கின்றது. இதுவாக மாநில வளர்ச்சி.
பெண்கள், குழந்தைகளுக்கு உரிமைக்கான இறைவி அமைப்பின் நிறுவனர் காய்த்ரி ஸ்ரீகாந்த்:
புதுச்சேரியில் அனைத்து பிரச்னைகளுக்கும் போதை பொருட்கள் முக்கிய காரணமாக உள்ளது. போதையால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துவிடாது. புதுச்சேரியில் குழந்தைகள் மீதான குற்றங்கள் இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும். பள்ளி, கல்லுாரியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நேர்மையான பெண் நிர்வாகிகளை குழந்தைகள் நல ஆணையத்திலும், மகளிர் ஆணையத்திலும் நியமிக்க வேண்டும். பெண்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளின் வெகுளித்தனத்தை பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையை சீரழிக்க முயலும் கயவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனை கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும்.

