தே.ஜ.,வில் 'சீட்' கிடைக்காதவர்கள் த.வெ.க.,விற்கு படையெடுப்பு
தே.ஜ.,வில் 'சீட்' கிடைக்காதவர்கள் த.வெ.க.,விற்கு படையெடுப்பு
ADDED : மார் 22, 2026 06:10 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் 'சீட்' கிடைக்காத முன்னாள், இந்நாள் எம்.எல். ஏ.,க்கள் த.வெ.க.,விற்கு படையெடுக்க து வங்கியுள்ளனர்.
சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளது. மொத்த வாக்காளர்கள் 9.5 லட்சம் பேர் மட்டுமே. ஒரு தொகுதியில் அதிகப்பட்சமாக 50 ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால், இங்கு, அரசியல் கட்சிகளின் செல்வாக்கை காட்டிலும், வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கே வெற்றி, தோல்வியை நிர்ணயிக் கிறது.
அரசியல் கட்சியினர் நடைபெற உள்ள தேர்தலுக்காக கடந்த ஓராண்டாகவே தொகுதி தோறும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி, ஆதரவு திரட்டி வந்தனர் .
இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு தே.ஜ., கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிந்ததை தொடர்ந்த, என்.ஆர்.காங்., மற்றும் ப.ஜ.வில் தலா 9 தொகுதி களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
என்.ஆர்.காங்., கட்சி யில் 7 தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
பா.ஜ., சார்பில் போட்டியிட தயாராக இருந்த ஊசுடு எம்.எல்.ஏ., சாய்சரவணன் குமார், முத்தியால்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மணவெளி தொகுதி பா.ஜ., பிரமுகர் ராமு, நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ., ரிச்சர்ட் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, என்.ஆர்.,காங்., சார்பில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், ஆறுமுகம், லட்சுமிகாந்தன், பாஸ்கரன் ஆகியோருக்கு இதுவரை தொகுதி வழங்கப்படவில்லை.
முத்தியால்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், கூட்டணியில் அங்கு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட திட்டமிட்ட முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த தேர்தலில் பாகூர் தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ., தனவேலுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.
தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்காததால், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வையாபுரி மணிகண்டன், தனவேலு, பா.ஜ., பிரமுகர் ராம் உள்ளிட்டோர் த.வெ.க., சார்பில் தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ளனர்.
இவர்கள், இன்று பனையூர் சென்று விஜய் முன்னிலையில் தங்களை த.வெ.க.,வில் இணைத்து கொண்டு அக்கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிட நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
