தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பொது இடத்தில் ரகளை செய்தவர்கள் கைது

பொது இடத்தில் ரகளை செய்தவர்கள் கைது

பொது இடத்தில் ரகளை செய்தவர்கள் கைது


UPDATED : அக் 26, 2026 07:04 PM

ADDED : அக் 26, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 07:04 PM ADDED : அக் 26, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டி .நகர் போலீஸ் சிறப்பு ஏட்டு காத்தவராயன் தலைமையிலான போலீசார் நேற்று (அக்.,25) மாலை 5.30 மணியளவில் கோரிமேடு, டிரக் டெர்மினல் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்ட சண்முகாபுரம் ஐயனார்,41; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

அதேபோல்,தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில், மது போதையில் ரகளையில் ஈடுபட்ட திலாஸ்பேட்டை சுரேஷ்குமார்,28; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

சேதராப்பட்டு போலீசார் நேற்று மாலை 3.15 மணியளவில் பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட காட்டேரிகுப்பம் குணசேகரன்,29; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று அரும்பார்த்தபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணபதி நகர் பகுதியில் குடிபோதையில் பொது இடத்தில் அநாகரிமாக நடந்து கொண்ட மூலகுளம் இருதயராஜ்,40; என்பவரை வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பெரியகடை போலீசார் நேற்று இரவு 8.15 மணியளவில் கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காந்தி சிலை அருகில், பொது இடத்தில் ஆபாசமாக பேசி, அநாகரிமாக நடந்து கொண்ட, செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஜோதிநாத்,27;பிரபு,40;ஜெயகுமார்,36; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை போலீசார் நேற்று இரவு 9.00 மணியளவில் வாழைக்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முனிசிபல் குடியிருப்பு பகுதியில் பொது இடத்தில் அநாகரிமாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த சந்திரன்,30; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

காலாப்பட்டு போலீசார் பெரியகாலாப்பட்டு பகுதியில் நேற்று இரவு 8.45 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அன்னை நகர் பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெரிகாலாப்பட்டு ராணா,39; என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

அதேபோல்,கடற்கரை பகுதியில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவிவர்மன்,30; என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு,11.30 மணியளவில் வேல்ராம்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில், பொது இடத்தில்,குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வேல்ராம்பட்டு அரவிந்த்,22; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

மாகே போலீசார் நேற்று முன்தினம் காலை பழைய போஸ்ட் ஆபிஸ் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கேரளம்,கோழிக்கோடு நடபுரம் பகுதியை சேர்ந்த மிதுன்ராஜ்,37; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

பள்ளூர் போலீசார் நேற்று முன்தினம் காலை பரல் மெயின் ரோடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி தனியார் பார் அருகில், பொது இடத்தில் குடிபோதையில், ரகளையில் ஈடுபட்ட கேரளம் கண்ணுார் மாவட்டம் படணக்கரா பகுதியை சேர்ந்த அமித்,32; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

ஏனாம் போலீசார் நேற்று முன்தினம் மாலை 4.50 மணியளவில் மார்க்கெட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பொது இடத்தில் குடிபோதையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் காஜிலுாரு பகுதியை சேர்ந்த கமடிதுர்காசிவபிரசாத்,33; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us