/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி திரும்பியவர்கள் முதல்வருக்கு நன்றி
/
புதுச்சேரி திரும்பியவர்கள் முதல்வருக்கு நன்றி
ADDED : அக் 16, 2024 06:54 AM
புதுச்சேரி : கம்போடியாவில் இருந்து புதுச்சேரி திரும்பியவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி, சோனாம்பாளையம் சுப்பையா சாலையை சேர்ந்தவர் ஸ்டீபன், 20; வம்பாகீரப்பாளையம் பிரசன்னா, 23; ஆகியோர், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேலைக்காக சட்டவிரோதமாக கம்போடிய நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களை அங்கிருந்து பத்திரமாக புதுச்சேரி அழைத்து வர முதல்வர் ரங்கசாமியிடம் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து, கம்போடியா நாட்டிலிருந்து அவர்களை பத்திரமாக புதுச்சேரிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.
புதுச்சேரி திரும்பிய ஸ்டீபன், பிரசன்னா ஆகியோர் நேற்று தங்களது பெற்றோருடன் முதல்வர் ரங்கசாமியை சட்டசபை வளாகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உடனிருந்தார்.