தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநள்ளாரில் இன்று சனிப்பெயர்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

 திருநள்ளாரில் இன்று சனிப்பெயர்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

 திருநள்ளாரில் இன்று சனிப்பெயர்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


ADDED : மார் 06, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிப்பெயர்ச்சி நடக்கிறது.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான் தனி சன்னதில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். பரிகார ஸ்தலமான இக்கோவிலில் இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சிக்கு 45 நாட்கள் முன்பும், பின்பும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

இந்நிலையில், சனி பகவான் இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப் பெயர்ச்சி பரிகாரத்திற்காக வரும் பக்தர்கள் வசதிக்காக நேற்று முதல் சிறப்பு அபிேஷகம், அலங்காரம், அரச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். பக்தர்கள், கூட்ட நெரிசலின்றி, சுவாமி தரிசனம் செய்திடவும், மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளன.

நளன் குளத்தில் நீராடும் பக்தர்கள் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் பொருட்டு சோப்பு, ஷாம்பு போன்றவைகளை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us