தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை


ADDED : ஜன 08, 2024 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2024 04:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலுக்குஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஞாயிற்றுக்கிழமை சிங்கிரிகுடி கோவிலுக்கு புனித பாதயாத்திரை செல்வது வழக்கம்.இதில், தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த திருமால் அடியார்கள், பஜனை குழுக்கள், பொதுமக்கள் பங்கேற்பர்.அந்த வகையில், 27ம் ஆண்டு புனித யாத்திரை விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து காலை 6:00 மணிக்கு பாதயாத்திரை துவங்கியது.

தொடர்ந்து புதுச்சேரி, கடலுார் சாலைகள் வழியாக சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவிலை பக்தர்கள் சென்றடைந்தனர்.இதில் சுவாமிக்கு திவ்ய நாம பஜனை, விசேஷ திருமஞ்சPம் நடந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு பூஜிக்கப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.பாதயாத்திரையையொட்டி, பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை புதுச்சேரி நரசிம்ம பெருமாள் ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, பொருளாளர் வாசுதேவன், துணை தலைவர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us