/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் வங்கி மேலாளருக்கு மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
/
தனியார் வங்கி மேலாளருக்கு மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
தனியார் வங்கி மேலாளருக்கு மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
தனியார் வங்கி மேலாளருக்கு மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
ADDED : டிச 13, 2024 05:59 AM
புதுச்சேரி: தவணையை கட்டாததால், காரை பறிமுதல் செய்த, வங்கி அதிகாரியை மிரட்டி, தகராறு செய்த 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அம்பலத்தடையார் வீதி, தனியார் வங்கியில், சிதம்பரம் அடுத்த வீரமுடையாநத்தம் பகுதியை சேர்ந்த சிவா, கடனில் கார் வாங்கியுள்ளார். 3 மாதங்கள் தவணை செலுத்தியவர், அதன் பிறகு சரியான முறையில் தவணையை செலுத்த வில்லை. இது தொடர்பாக, வங்கியில் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அவர் எந்த பதிலும் தராமல் இருந்ததால், வங்கி ஊழியர்கள், சேத்தியாதேப்பு போலீஸ் ஸ்டேஷன் மூலம், கடந்த 5ம் தேதி, காரை பறிமுதல் செய்து, எடுத்து வந்தனர்.
இந்நிலையில், சிவா தனது ஆதரவாளர்களுடன், வங்கிக்கு சென்று, மேலாளர் கார்த்தியிடம், எப்படி காரை பறிமுதல் செய்தீர்கள் என அவரிடம் தகராறு செய்து, மிரட்டி சென்றார். இதுகுறித்து, மேலாளர் நேற்று முன்தினம், கொடுத்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார், சிவா உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

