தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்

 பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்

 பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டல்


ADDED : ஜூன் 24, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடன் செயலியில் பணம் பெற்ற பெண்ணின் படத்தை மார்பிங் செய்து மிரட்டிய மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியை சேர்ந்த பெண், மொபைலில் கடன் செயலி விளம்பரத்தை பார்த்து, தனது மொபைல் எண்ணை பதிவிட்டுள்ளார். பின், சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் ரூ. 4 ஆயிரத்து 700 கடன் வரவு வைக்கப்பட்டது. கடன் கேட்டு விண்ணப்பிக்காத நிலையிலும், அப்பெண்ணும் கடன் தொகையை சரியான நேரத்தில் முழுவதையும் திரும்ப செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் மர்மநபர் ஒருவர், அப்பெண்ணின் படத்தை மார்பிங் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி, கூடுதல் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதில் அச்சமடைந்த அப்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us