/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணுக்கு மிரட்டல் 3 பேருக்கு வலை
/
பெண்ணுக்கு மிரட்டல் 3 பேருக்கு வலை
ADDED : நவ 21, 2025 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
மணவெளியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகள் அக்சிலியாமேரி, 20. இவர், தனது உறவினர் வீடான அரியாங்குப்பம் அன்னை நகரில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பூந்தொட்டிகள் மற்றும் நாற்காலிகளை சேதப்படுத்தினர்.
அதனை கண்டித்த அக்சிலியாமேரியை, அவதுாறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
புகாரின் பேரில், அரியாங்குப்பம் உதவி சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிந்து, மூவரையும் தேடி வருகின்றனர்.

