/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிரியருக்கு மிரட்டல் உறவினருக்கு வலை
/
ஆசிரியருக்கு மிரட்டல் உறவினருக்கு வலை
ADDED : டிச 13, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் அசோக், 50, புதுச்சேரி அரசு பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் கீழ் தளத்தில், இவரது அக்காவின் கணவர், தணிகாசலம் வசித்த வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்னை தொடர்பாக, முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது இரண்டு மகளிடம் தணிகாசலம் தகராறு செய்தார். அதை தட்டி கேட்ட அசோக்கை அநாகரீகமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். அசோக் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தணிகாசலத்தை தேடிவருகின்றனர்.

