ADDED : மார் 08, 2024 11:20 PM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே கஞ்சா விற்ற சிறுவன் உட்பட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வில்லியனுார் அருகே உள்ள கோபாலன் கடை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் - இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் கிரைம் போலீசார் கோபாலன்கடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்ட மூவர் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், வில்லியனுார், கோபாலன்கடை அம்மா நகரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் தயாநிதி, 18; வாழப்பட்டாம்பாளையம் கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெயப்ரகாஷ், 28, பிச்சைவீரன்பேட் பகுதியை சேர்ந்த 17 சிறுவன் என தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்பேரில், தயாநிதி வீட்டின் பின்புரம் பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, இருவரை காலாப்பட்டு சிறையிலும், சிறுவனை அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

