/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா
/
பல்கலைக்கழகத்தில் முப்பெரும் விழா
ADDED : டிச 20, 2024 04:11 AM

புதுச்சேரி; புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தமிழியற்புலத்தில் சுப்ரமணிய பாரதி இருக்கை சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
பல்கலைக்கழக வளாக தமிழியற்புலம் கருத்தரங்க அறையில் நடந்த விழாவிற்கு பல்கலைக்கழக தமிழியற்புல முதன்மையர் சுடலைமுத்து தலைமை தாங்கினார்.
புல இணைப் பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். சுப்ரமணிய பாரதி இருக்கை இணைப் பேராசிரியர் ரவிக்குமார்,நோக்கவுரையாற்றினார்.
பல்கலைக்கழக இயக்குநர் கிளமெண்ட் லுார்து, தமிழியற்புல இணைப் பேராசிரியர் கருணாநிதி வாழ்த்திப் பேசினர்.
தொடர்ந்து, ராகுலனின் பால்வெளியில் நீந்தும் உடற்படகு எனும் நுாலின் முதல் பிரதியை சிறப்புச் சொற்பொழி வாளர் உமாபாரதி வெளியிட தமிழியற்புல பேராசிரியர்கள் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் 'எழுத்தறி வித்தவன் இறைவன் பாரதி' எனும் தலைப்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ்த் துறைத் தலைவர் சேதுபதி உரை யாற்றினார்.
அவர் பாரதி விருது பெற்றதை அடுத்து பாராட்டு விழா நடந்தது.பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் லட்சுமி தத்தை நன்றி கூறினார்.