/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசுப் பள்ளிகளில் முப்பெரும் விழா
/
அரசுப் பள்ளிகளில் முப்பெரும் விழா
ADDED : மார் 11, 2026 04:55 AM

புதுச்சேரி: குருசுகுப்பம் மற்றும் சோலை நகர் அரசு தொடக்கப் பள்ளியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு விழா, கற்றல் கற்பித்தல் பொருள் கண்காட்சி, இ.சி.சி.இ., டே, மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, தலைமையாசிரியர் சீனுவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பெண் கல்வி இணை இயக்குனர் ராமச்சந்திரன், வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களின் திறமையை பாராட்டி பரிசுகளை வழங்கினர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இரு பள்ளி ஆசிரியர்கள் அவிலா, வித்யா, நித்யாந்தினி, அன்பரசி, ரத்னப்பிரியா, வசந்த பிரியா, ராஜ ராஜ சோழன், முருகசாமி, கிரிஜா, நர்மதா, கஸ்துாரி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

