/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்று நாள் ஆர்க்கிட் சிறப்பு கண்காட்சி
/
மூன்று நாள் ஆர்க்கிட் சிறப்பு கண்காட்சி
ADDED : டிச 28, 2024 05:40 AM

புதுச்சேரி : காட்டின் பல்லுாயிர் பன்மயசூழலில் முக்கிய அங்கம் வகிக்கும் அரிய ஆர்க்கிட் செடி இனங்கள் பற்றிய சிறப்பு கண்காட்சி ஆரோவில்லில் நேற்று துவங்கியது.
புதுச்சேரி அடுத்த குயிலாப்பாளையம் ஆரோவில் ரோடு கால்வே காபி ரோஸ்டரில் மூன்று நாள் ஆர்க்கிட் சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது.
வேழம் இயற்கை அங்காடி நிறுவனர் மேத்தா சரஸ்வதி, ஜீவராசி ட்ரஸ்ட் நிறுவனர் மேத்தா தட்சிணாமூர்த்தி ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து, நடந்த ஆர்க்கிட் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா வாசிகள், ஆரோவில் வாசிகள் பார்வையிட்டனர். அவர்களுக்கு, ஆர்க்கிட் தாவரங்களின் பல்லுாயிர் பன்மய சூழல் குறித்து விளக்கப்பட்டது.
வேழம் இயற்கை அங்காடி நிறுவனர் மேத்தா சரஸ்வதி கூறியதாவது:
பொதுவாக ஆர்க்கிட்செடிகள் ஈரத்தன்மை மிக்க தாவரங்கள், பாறைகளில் ஓட்டுண்ணி தாவரங்களாக இவை படர்ந்து இருக்கும்.
இவற்றின் பவுடர் போன்ற விதைகள் காற்றில் பரவி, அது எங்கெல்லாம் விழுகிறதோ,அங்கெல்லாம் மீண்டும் அடுத்த தலைமுறைகளாகஉயிர் பெறும்.
இயற்கைச் சூழலில், மகரந்தச் சேர்க்கைக்கு ஒவ்வொரு ஆர்க்கிட் இனமும் ஒவ்வொரு பூச்சியைச் சார்ந்தே இருக்கும். பூச்சிகள் மட்டும் இல்லையென்றால் ஆர்க்கிட் இனமே அழிந்து போய்விடும். பூச்சிகளை கவர்வதற்காகத் தான் இதன் பூக்கள் கண்ணைக் கவரும் நிறத்திலும், வடிவங்களிலும் காணப்படுகின்றன.
ஆனால்இப்போது எல்லாம் காடுகளில் உள்ள தாவரங்களில்இருந்து அப்படி பெயர்த்து எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்து வளர்க்கின்றனர். இது காட்டின் பல்லுாயிர் பன்மய சூழலை பாதித்து, அரியஆர்க்கிட் செடி இனங்களை காடுகளில்அடியோடுகாணாமல் போய்விட செய்து விடும்.
இதற்கு ஒரே தீர்வு திசு கல்ச்சர் முறை தான். அதனால் தான் அரிதாகி வரும் ஆர்க்கிட் செடிகளை உருவாக்கி, கண்காட்சியாக வைத்துள்ளோம்' என்றார்.
கண்காட்சி நேரம்:
கண்காட்சியை இன்று (28ம் தேதி), நாளை 29ம் தேதி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பார்வையிடலாம். வழிகாட்டுதலுக்கு 74484-99770, 70929-99770 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.கண்காட்சியை வேழம் இயற்கை அங்காடி, ஜீவராசி ட்ரஸ்ட்இதனை இணைந்து ஒருங்கிணைத்துள்ளன.

