/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் குளித்த வெளி மாநில சுற்றுலா பயணியர் மூவர் பலி
/
கடலில் குளித்த வெளி மாநில சுற்றுலா பயணியர் மூவர் பலி
கடலில் குளித்த வெளி மாநில சுற்றுலா பயணியர் மூவர் பலி
கடலில் குளித்த வெளி மாநில சுற்றுலா பயணியர் மூவர் பலி
ADDED : ஆக 17, 2025 02:00 AM
அரியாங்குப்பம்:புதுச்சேரி அருகே கடலில் குளித்த கர்நாடக மாநில இளம்பெண் உள்ளிட்ட மூன்று வெளி மாநில சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் 12 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். முத்தியால்பேட்டை பகுதியில் அறை எடுத்து தங்கினர். இவர்கள்,வாடகை பைக் மூலம் அரியாங்குப்பம் அடுத்த சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச்சிற்கு நேற்று காலை 8:00 மணிக்கு சென்று, கடலில் குளித்தனர்.அப்போது, கடல் அலையில் சிக்கிய ஐந்து பேர் இழுத்து செல்லப்பட்டனர்.
அவர்களுடன் குளித்தவர்கள் கூச்சலிட்டனர். அங்கிருந்த மீனவர்கள் கடலில் குதித்து, 5 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.அதில், கர்நாடகாவில் பணிபுரியும் ஐ.டி., நிறுவன ஊழியர்களான ஷிமோகா பகுதியை சேர்ந்த லட்சுமப்பா மகள் மேகா, 29, ஹூப்ளி பகுதியை சேர்ந்த சஷிதர் மகன் பிர்ஜ்வால்மேதி, 23, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த வெங்கட் நரசிம்மையா மகன் பவன்குமார், 25, ஆகியோர் இறந்திருந்தனர்.
குஜராத்தை சேர்ந்த அதிதி, 23, கர்நாடகா மாநிலம், சிக்கமகளூரை சேர்ந்த ஜீவன், 25, ஆகியோர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.போலீசார்சம்பவ இடத்திற்கு சென்று, மூன்று பேரின் உடல்களை மீட்டு, விசாரிக்கின்றனர்.