தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா

சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா

சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளியில் முப்பெரும் விழா


UPDATED : நவ 17, 2026 06:18 PM

ADDED : நவ 17, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:18 PM ADDED : நவ 17, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம், கலை, அறிவியல் கண்காட்சி மற்றும் ஆண்டு விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசிலா சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குநர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தார்.

விழாவில், ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சவுண்டப்பன், மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தின் மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன், பாலாஜி ஹெல்த் கேர் இயக்குனர் அஜித்தா ஆகியோர் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை கலை, அறிவியல் கண்காட்சி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர்.

திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சாரண சாரணிய இயக்கத்தின் மாநில இயக்குனர் சண்முகம் ஆகியோர் 7ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

பள்ளியின் இயக்குநர் மோகன் குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us