/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி: மூவர் படுகாயம்
/
லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி: மூவர் படுகாயம்
லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி: மூவர் படுகாயம்
லாரி மீது கார் மோதி விபத்து ஒருவர் பலி: மூவர் படுகாயம்
ADDED : பிப் 15, 2025 05:20 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சாலையோரம் நின்றியிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.
தென்காசி அடுத்த சுரண்டை பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 36; சென்னையில் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது மனைவி லதா, 42; மகள் லக் ஷியா, 9; திருமாபுரத்தை சேர்ந்த உறவினர் காந்தி, 44; ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு பதிவெண் இல்லாத கியா காரில் தென்காசியில் இருந்து புறப்பட்டனர்.
காரை முருகேசன் ஓட்டினார். நேற்று காலை 5:45 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் செல்லும் புறவழிச் சாலையில் மேம்பாலம் அருகே வந்தபோது, சாலையோரம் பழுதாகி நின்றிருந்த சிமென்ட் லோடு லாரியின் பின்னால் மோதியது.
இதில், இடிபாடுகளில் சிக்கி காந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். லதா, லக் ஷயா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடன் 3 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இடிபாடுகளில் சிக்கி இறந்த காந்தியின் உடலை உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
விபத்து குறித்து, உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சீட்பெல்ட் அணிந்திருந்ததாலும், ஏர் பலுான் செயல்பட்டதாலும் முருகேசன் உயிர் தப்பினார். காந்தி சீட்பெல்ட் அணியாததால் ஏர்பலுான் செயல்பட்டும் அவர் இறக்க நேர்ந்தது.

