/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
/
தமிழ்ச்சங்கத்தில் முப்பெரும் விழா
ADDED : டிச 13, 2024 06:22 AM

புதுச்சேரி: கலை இலக்கியத் தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில், பாரதியார் பிறந்தநாள், கவியரங்கம் மற்றும் படைப்பாளி பைரவிக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவிற்கு, மன்றத்தின் நிறுவனர் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். பாவலர் பரமேசுவரன் வரவேற்றார். ஆறுமுகம், கார்த்திக்கேயன், சந்திரசேகரன், சோபியா முன்னிலை வகித்தனர்.
கலைமாமணி பாரதி, பாவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பாரதியாரின் சிந்தனைகள் தலைப்பில் நடந்த கவியரங்கத்தில், பங்கேற்று கவிதை வாசித்த கவிஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 1,700 கவியரங்கங்களில் பங்கேற்று சாதனை படைத்த படைப்பாளி பைரவியை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
கவிஞர் வேல்விழி சிவக்கொழுந்து தொகுத்து வழங்கினார். கவிஞர் குமரவேல் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முனைவர் அசோகன், அருள்பூசனி, குமார், முகம்மது அலி, கதிர் முத்துரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர்.

