/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது
/
ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது
ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது
ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கைது
ADDED : மே 17, 2025 11:30 PM
பாகூர்: பாகூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி, மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் அடுத்த அரங்கனுார் ஐய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்தால்ராஜன் மனைவி ஆஷா, 37. இவர், கடந்த 2022ம் ஆண்டு, அதே ஊரைச் சேர்ந்த சத்யா, அவரது கணவர் மணிகண்டன், மகன் விக்னேஷ் ஆகியோரிடம், 3 லட்சம் மற்றும் 5 லட்சம் என இரண்டு ஏல சீட்டு கட்டி வந்தார். ஆஷா, இரண்டு சீட்டுகளையும் கட்டி முடிந்து விட்ட நிலையில், பணத்தை சத்யாவிடம் கேட்டுள்ளார்.
சத்யா பணத்தை தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். ஆஷா, அவரது வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டபோது, சத்தியாவின் குடும்பத்தினர் அவரை திட்டி, மிரட்டல் விடுத்தனர்.
தொடர்ந்து, சத்தியாவிடம் சீட்டு கட்டியவர்கள் பணத்தை கேட்டு வந்த நிலையில், அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தலைமறைவானர். இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி, சத்யாவிடம் சீட்டு கட்டிய 20க்கும் மேற்பட்டோர், அவரை பிடித்து வந்து பாகூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, சீட்டு கட்டிய பணத்தை பெற்று தருமாறு கூறி உள்ளனர்.
அப்போது, அவர் 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் பணத்தை கொடுத்து விடுவதாக எழுதி கொடுத்து விட்டு சென்றார். அதன் பின், சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் தலைமறைவாகினர்.
இது குறித்து ஆஷா, பாகூர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த சத்யா, 40; அவரது கணவர் மணிகண்டன் 44; மகன் விக்னேஷ், 21; ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.