/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சீட்டு விளையாடிய மூன்று பேர் கைது
/
சீட்டு விளையாடிய மூன்று பேர் கைது
ADDED : டிச 20, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் சீட்டு விளையாடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், திருநள்ளாறு தனியார் கம்பெனி அருகில் உள்ள வயலில் சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசாரை பார்த்து அங்கிருந்த தப்பிக்க முயன்ற மூவரை மடக்கினர்.
விசாரணையில் அவர்கள், செல்லுார், சின்னப்பேட்டை பாண்டியன், 38; மாதாகோவில் தெரு புலமைபித்தன், 33; செல்லுார் கார்த்திகேயன், 36, ஆகியோர் என்பதும், அவர்கள், காசு வைத்து சீட்டு விளையாடியதும் தெரிய வந்தது. அவர்கள் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.