UPDATED : நவ 11, 2026 11:20 PM
ADDED : நவ 11, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பில், கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக சென்றவர்களுக்கு மிரட்டல் விடுத்த வில்லியனுார் இளங்கோ மகன் கிேஷார், 22; கூடப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட வடமங்கலம் மூர்த்தி மகன் ஜெயசங்கர், 26; கணுவாப்பேட்டை பகுதியில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வில்லியனுார் கணேசன் மகன் வெங்கடேசபெருமாள், 26, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
