/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் அருகே பேனர் விழுந்ததில் மூவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
/
வில்லியனுார் அருகே பேனர் விழுந்ததில் மூவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
வில்லியனுார் அருகே பேனர் விழுந்ததில் மூவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
வில்லியனுார் அருகே பேனர் விழுந்ததில் மூவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்
ADDED : மே 06, 2025 04:42 AM
வில்லியனுார்: வில்லியனுார் அருகே பேனர் விழுந்ததில் மூவர் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
வில்லியனுார் மாட வீதிகள், பைபாஸ் சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பிறந்தநாள், திருமண வரவேற்பு துவங்கி கண்ணீர் அஞ்சலி நினைவுநாள் என பல்வேறு வகையான பேனர்கள் சாலையை ஆக்கிரமித்து அதிக அளவில் வைத்து வருகின்றனர்.
பொதுப்பணித்துறையில் சாலை மற்றும் கட்டடங்கள், கோட்டம் நகர பகுதியில் வைக்கப்படும் பேனர்களை அவ்வப்போது அகற்றி வருகின்றனர். பைபாஸ் சாலையில் வைக்கப்படும் பேனர்களை நெடுஞ்சாலை துறையினர் கண்டுகொள்வதே இல்லை.
இதனால் பைபாஸ் சாலை பகுதியில் வைக்கப்படும் பேனர்கள் மட்டும் பல நாட்கள் எடுக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.
மேலும் வில்லியனுார் சுற்றிலும் பல்வேறு கிராமங்களிலும் பேனர் கலாசாரம் அதிகரித்துவிட்டது. பேனர் வைப்பதை கொம்யூன் பஞ்சாயத்து கண்டுகொள்ளாததால் விபத்துகள் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் என பலத்த காற்றுடன் மழை துவங்கியபோது பத்துக்கண்ணு சாலை கூடப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர் காற்றில் கிழிந்து சாலையில் ஒரு பைக்கில் குடும்பத்துடன் சென்ற மூன்று பேர் மீது விழுந்துள்ளது.
பேனருக்குள் சிக்கிய குடும்பத்தினரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அனுப்பிவைத்தனர்.
காற்றில் கிழிந்த பேனர் விழுந்ததால் அதிஷ்டவசமாக காயமின்றி மூவரும் தப்பினர்.
அடித்த காற்றில் சாலையில் வைத்திருந்த பேனர் சாரத்துடன் சாய்ந்து விழுந்திருந்தால் உயிர் பலி ஏற்பட்டிருக்கும்.
கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை கூட்டாக இணைந்து வில்லியனுார் நகர், பைபாஸ் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி சாலையில் வைத்துள்ள பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

