/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.75 லட்சம் மோசடி
/
போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.75 லட்சம் மோசடி
போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.75 லட்சம் மோசடி
போலி பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ.75 லட்சம் மோசடி
ADDED : செப் 26, 2024 01:13 AM

புதுச்சேரி: போலியான பங்கு சந்தை இணையதளம் மூலம் அரசு அதிகாரியிடம் ரூ. 75 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையராக இருந்து, தற்போது அதிகாரியாக பதவி வகிப்பவரை, கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறினர்.
இதனை நம்பிய அதிகாரி, மர்ம நபர்கள் உருவாக்கி கொடுத்த ஆன்லைன் பக்கத்தில், பல தவணைகளில் ரூ. 75 லட்சம் முதலீடு செய்தார். அதன் மூலம் அவர் ரூ. 8 கோடி லாபம் ஈட்டியது போல, ஆன்லைன் பக்கத்தில் காண்பித்தது.
இந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்தார். பணத்தை எடுக்க வேண்டும் என்றால், அதற்கான வரி ரூ. 45 லட்சம் தங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என மர்ம நபர்கள் கூறினர்.
இதனை நம்பிய அதிகாரி, ரூ. 45 லட்சம் பணத்தை மர்ம நபரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சென்றார். இதை அறிந்த வங்கி மேலாளர், சைபர் கிரைம் மோசடி கும்பல் உங்களை ஏமாற்றி உள்ளது என விளக்கினர்.
அதன்பின்னரே, தான் ஏமாந்ததை உணர்ந்த அதிகாரி, இது தொடர்பாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.