/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிணைய பத்திரங்கள் மூலம் ரூ. 200 கோடி நிதி திரட்டுகிறது புதுச்சேரி அரசு
/
பிணைய பத்திரங்கள் மூலம் ரூ. 200 கோடி நிதி திரட்டுகிறது புதுச்சேரி அரசு
பிணைய பத்திரங்கள் மூலம் ரூ. 200 கோடி நிதி திரட்டுகிறது புதுச்சேரி அரசு
பிணைய பத்திரங்கள் மூலம் ரூ. 200 கோடி நிதி திரட்டுகிறது புதுச்சேரி அரசு
ADDED : ஜன 05, 2024 06:34 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு பிணைய பத்திரங்கள் மூலம் 200 கோடி ரூபாய் நிதி திரட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் நிதித் துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசு மொத்தம் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 ஆண்டு கால பிணைய பத்திரங்களை குறைந்தபட்சம் 10,000 ரூபாய்க்கும், அதன் பின், 10,000 ரூபாய் மடங்குகளிலும் ஏலம் விடப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் 9ம் தேதி இந்த ஏலம் நடக்கும்.ஆர்வம் உள்ள நிறுவனங்கள், கூட்டமைப்பு குழுமங்கள், நிதி நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனங்கள், பொறுப்புரிமை நிதியங்கள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் கூட்டு போட்டியில்லாத ஏலத்தை அவரை சார்ந்த அனைத்து நிறுவனங்களும் பேசி மின்னணு முறையில் www.rbi.org.in என்ற இணைய முகவரியில் வரும் 9ம் தேதி காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை சமர்பிக்க வேண்டும்.
ஏலத்தின் முடிவுகள் இந்திய ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் வெளியிடும்.
ஏலம் கிடைக்கப் பெற்றவர்கள் தங்களது ஏலங்களின் தெரிவிக்கப்பட்ட பிணைய பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசர்வ் வங்கி மும்பை கோட்டை அல்லது சென்னையில் செலுத்தத்தக்க வகையில் வங்கியாளர் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை ஜனவரி 10ம் தேதி வங்கிப்பணி நேரம் முடிவதற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த பிணைய பத்திரங்களுக்கு ஏலத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் தீர்மானிக்கப்பட்ட கூடிய விதத்தில் வட்டி வழங்கப்படும். இந்த வட்டி 6 மாதத்திற்கு ஒருமுறை அதாவது, ஜூலை 10 மற்றும் ஜனவரி 10 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.