ADDED : செப் 10, 2026 05:51 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று இரவு சூறைக் காற்றுடன் கன மழை பெய்ததால் லாஸ்பேட்டையில் சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது.
புதுச்சேரியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை முதல் வானம் மேகம் மூட்டதுடன் காணப்பட்ட நிலையில், இரவு 11:00 மணியளவில் சூறைகாற்றுடன் கனமழை பெய்தது.
இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி மையம் எதிரில் இருந்த பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையில் இருந்த மின் கம்பத்தில் விழுந்தது.
இதில் மின்கம்பம் உடைந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மின் துறை ஊழியர்கள் வந்து மின் இணைப்பினை சரிசெய்தனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
