தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சனி பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்

சனி பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்

சனி பகவான் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்


ADDED : ஜூன் 01, 2025 11:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 11:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

இக்கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் துவக்கியது. பின், பஞ்சமூர்த்தி வீதி உலா கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை விநாயகர் உற்சவம், கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை சுப்ரமணிய சுவாமி உற்சவம், 30ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருளுதல், நேற்று வசந்த மண்டபத்தில் இருந்து உன்மத்த நடனத்துடன் செண்பக தியாகராஜர் யதாஸ்தானம் எழுந்தருளினார். தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

வரும் 4ம் தேதி பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா, வரும் 6ம் தேதி தேரோட்டம், 7ம் சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us