/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவக் கல்லுாரியில் பணிக்கு வராமல் 'டிமிக்கி'
/
மருத்துவக் கல்லுாரியில் பணிக்கு வராமல் 'டிமிக்கி'
ADDED : பிப் 17, 2024 11:37 PM
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஊழியர்கள் சிலர் பணிக்கு வராமல் 'டிமிக்கி' கொடுத்து வருவதாக சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர், பணிக்கு வந்த வேகத்தில் கையெழுத்திட்டுவிட்டு புறப்பட்டு சென்று விடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி உள்ளது. பணிக்கு வராதது குறித்து யாராவது கேட்டால் நாங்கள் யார் தெரியுமா? என, முதல்வரில் ஆரம்பித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் வரை பலரது பெயரை கூறி மிரட்டுவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
மருத்துவமனை பணிகள் பாதிக்கப்படுவதோடு, நோயாளிகளும் பாதிக்கப்படுகின்றனர்.