தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திண்டிவனம் வியாபாரி புதுச்சேரியில் மர்ம சாவு

திண்டிவனம் வியாபாரி புதுச்சேரியில் மர்ம சாவு

திண்டிவனம் வியாபாரி புதுச்சேரியில் மர்ம சாவு


ADDED : ஜூலை 18, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2025 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : திண்டிவனம் தேங்காய் வியாபாரி புதுச்சேரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார்,37; அதே பகுதியில் தேங்காய் மண்டி நடத்தி வந்தார். இவர், நேற்று முன்தினம், வியாபாரம் தொடர்பாக புதுச்சேரிக்கு சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வந்தவர், அன்று மாலை, புதுச்சேரி கடற்கரை சாலை குபேர் சிலை அருகே வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். அருகில் பூச்சி மருந்து பாட்டில் கிடந்தது.

அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us