ADDED : ஏப் 22, 2026 05:54 AM
புதுச்சேரி: கூனிச்சம்பட்டில் சாலை அமைக்கும் பணியின் போது, டிப்பர் லாரி மோதி மின்கம்பம் சேதமடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதி, கூனிச்சம்பட்டு, கே.வி.ஆர். நகரில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் அருளராசன் ஒப்பந்தத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இப்பணியில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி ஒன்று, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது கடந்த 14ம் தேதி எதிர்பாராத விதமாக மோதியதில் கம்பம் சேதமடைந்தது.
சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைத்து தரும்படி மின்துறை மூலம் ஒப்பந்ததாரருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை மின்கம்பம் சீரமைக்கப்படவில்லை.
இதுகுறித்து மின்துறை இளநிலை பொறியாளர் மிருதுலன் திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், டிப்பர் லாரி டிரைவர், கல்மண்டபத்தை சேர்ந்த முருகையன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
