/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்வீஸ் சாலையில் சிக்கிய டிப்பர் லாரி
/
சர்வீஸ் சாலையில் சிக்கிய டிப்பர் லாரி
ADDED : டிச 11, 2024 04:47 AM

பாகூர் : பரிக்கல்பட்டு கிராமத்தில் மேம்பாலம் பழுதான நிலையில், சர்வீஸ் சாலையில் சென்ற டிப்பர் லாரி மண்ணில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை பரிக்கல்பட்டு சந்திப்பு மேம்பாலத்தில் சாலை விரிசல் ஏற்பட்டு பழுதான நிலையில், வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக சென்று வருகிறது. இந்நிலையில், திருவக்கரையில் இருந்து கடலுார் நோக்கி நேற்று மதியம் டிப்பர் லாரி ஒன்று ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சர்வீஸ் சாலையில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட டிப்பர் லாரி ஒதுங்கிய போது, லாரியின் ஒரு பக்க டயர் மண்ணில் சிக்கியது. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு டிப்பர் லாரி மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.