/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நெட் சென்டர் உரிமையாளரிடம் டிப்டாப் நபர் நுாதன மோசடி
/
நெட் சென்டர் உரிமையாளரிடம் டிப்டாப் நபர் நுாதன மோசடி
நெட் சென்டர் உரிமையாளரிடம் டிப்டாப் நபர் நுாதன மோசடி
நெட் சென்டர் உரிமையாளரிடம் டிப்டாப் நபர் நுாதன மோசடி
ADDED : பிப் 14, 2024 03:36 AM
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கத்தில் நெட் சென்டர் உரிமையாளரிடம் நுாதனமுறையில் பண மோசடி செய்த டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 40; இவர் கரியமாணிக்கம் -மடுகரை சாலையில் நெட் சென்டர் நடத்தி வருகின்றனர்.
இவர் கடைக்கு நேற்று அதிகாரி போல் டிப்டாப்பாக உடை அணிந்து வந்த நபர் ஒருவர் உங்களது யு.பி.ஐ., ஐடிக்கு ரூ. 27,000 பணம் அனுப்புவதாகவும், அந்த பணத்தினை நீங்கள் பணமாக கொடுத்தால் ஒரு சதவீதம் கமிஷன் கொடுப்பதாக தெரிவித்தார். இதற்கு நடராஜன் சம்மதம் தெரிவித்தார். உடன் டிப்டாப் நபர் , நடராஜன் யு.பி.ஐ.,யை ஸ்கேன் செய்து ரூ. 27 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளார். பின் நடராஜன் , டிப்டாப் நபரிடம் அதற்கான பணத்தை ரொக்கமாக கையில் கொடுத்துள்ளார்.
சில மணி நேரத்தில் நடராஜன் கணக்கில் இருந்த பணம் காணமால் போன கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த நடராஜன் நேற்று சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

