
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டபாக்கம்அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
இதையொட்டி, காலை 6.30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து பெருமாள்- ஆண்டாள் சன்னதி புறப்பாடும், பின் அலங்கார மண்டபத்தில் ஒய்யாளி சேவையும், மாலை சாற்றும் மற்றும் வைபவம் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து பழவகை தட்டுகள் சீர்வரிசை வழங்கப்பட்டு,திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
இதில் சொரப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.