/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காஞ்சி தீர்த்தவாரி விழா கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
/
திருக்காஞ்சி தீர்த்தவாரி விழா கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
திருக்காஞ்சி தீர்த்தவாரி விழா கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
திருக்காஞ்சி தீர்த்தவாரி விழா கணபதி ேஹாமத்துடன் துவக்கம்
ADDED : பிப் 15, 2024 05:39 AM
வில்லியனுார் : திருக்காஞ்சியில் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று கணபதி ேஹாமத்துடன் துவங்கியது.
வில்லியனுார் அருகே உள்ள திருக்காஞ்சியில் பிரசித்திபெற்ற காசியிலும் வீசம் அதிகம் என அழைக்கப்படும் கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி மிகவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் திருவிழா நேற்று காலை அனுக்ஞை, கணபதி ேஹாமம் மற்றும் மாலையில் வாஸ்துசாந்தி கணேச உற்சவத்துடன் துவங்கியது. இன்று (15ம்தேதி) காலை 10:30 மணிக்கு மேல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில், முக்கிய விழாவாக வரும் 17 ம்தேதி மாலை அதிகார நந்தி சேவையும், 18 ம் தேதி பாரிவேட்டை நிகழ்ச்சியும், 22ம் தேதி இரவு திருக்கல்யாணமும், 23ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகிறது.
முக்கிய விழாவாக வரும் 24ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் உற்சவதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

