தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தமிழகத்தின் 2வது மிகப்பெரிய ராஜகோபுரம்

தமிழகத்தின் 2வது மிகப்பெரிய ராஜகோபுரம்

தமிழகத்தின் 2வது மிகப்பெரிய ராஜகோபுரம்


ADDED : நவ 23, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 09:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருணாசலேஸ்வரர் கட்டுரை: 2

தமிழகத்தின் 2வது மிகப்பெரிய ராஜகோபுரம்

- அருணசாலேஸ்வரர் கோவில், பல நுாற்றாண்டுகளுக்கு முன்னர் சோழ, ஹெய்சாள மற்றும் விஜய நகர நாய்க்க மன்னர்களால், 24 ஏக்கர் நிலபரப்பில், 9 கோபுரங்கள், 5 பிரகாரங்களுடன் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இத் திருக்கோவிலின் பிரதான நுழைவு வாயிலாக அமைந்துள்ள கிழக்கு இராஜகோபுரம், 217 அடி உயரம், 13 நிலைகள் மற்றும் 13 கலசம் கொண்ட தென்னிந்தியாவிலேயே இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரால், இக்கோபுரம் கட்டப்பட்டது.

வல்லாள மகாராஜா விற்கு அருணாசலேஸ்வரரே குழந்தையாக பிறந்ததாக கூறும் தல புராணம்

திருவண்ணாமலையை ஆண்ட வள்ளாள மஹாராஜாவிற்கு, குழந்தை இல்லாமல், அருணாச்சலேஸ்வரரிடம் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தபோது, அருணாச்சலேஸ்வரரே அவருக்கு மகனாக பிறந்ததாக, தல புராணங்கள் கூறுகிறது. இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும், மாசி மகத்தன்று வள்ளாள மஹாராஜாவிற்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது. இதற்காக, மாசி மாதம், மகம் நட்சத்திரத்தன்று, அருணாச்சலேஸ்வரர், கோவிலில் இருந்து மேள தாளங்களுடன் புறப்பட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம துரிஞ்சல் நதிக்கரைக்கு சென்று, துரிஞ்சல் நதியில் மூழ்கி திதி கொடுக்கும் நிகழ்வும், பின்னர், சம்மந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்மந்தம் கட்டும் நிகழ்வு நடக்கும். அப்போது, ஏராளமான பக்தர்கள் ஆற்றில் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரை வழிபடுவது வழக்கம்.

மாணிக்கவாசகருக்கு கோவில்

சைவ சமயக் குரவர்கள் (நால்வர்) என்பவர்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரமூர்த்தி நாயனார், மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் ஆவர். இவர்கள் சைவ பக்தி இலக்கியங்களையும் வழிபாட்டு நெறிகளையும் வளர்த்த முக்கிய நாயன்மார்கள். இத்தலத்தில் நால்வர்கள் பதிகங்கள், பதிகங்களாக பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் திருவண்ணாமலைக்கு வந்து பலகாலம் தங்கியிருந்து சைவத்திற்கு மார்கழியில் திருவெம்பாவை (20) பாடல்களையும், திருவம்மானை பாடல்களையும் இயற்றியுள்ளார். கிரிவலப்பாதையில் அடிஅண்ணாமலை என்னும் இடத்தில் மாணிக்கவாசகருக்கு ஒரு கோவில் இருப்பதை இன்றும் காணலாம்.

260 கோடி வருடம் பழமையான அண்ணாமலையார் மலை

திருவண்ணாமலை தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்று சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைப்பிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் எனப்படுகிறது. இம்மலையானது, 260 கோடி வருடங்கள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். மக்கள் வலம் வரும் கிரிவலப்பாதையில், அஷ்டலிங்க கோவில்களும், இரமணமகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகிராம் சுரத்குமார் மகான்கள் போன்றோர்கள் சமாதிகள் மற்றும் ஆஸ்ரமங்கள் அமைந்துள்ளன. எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வருகின்றனர் என்றாலும், முழுநிலவு நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது.பவுர்ணமி அன்று எண்ணற்ற சித்தர்கள் அண்ணாமலையை சுற்றி நடமாடுவதாகவும், சித்தர்களின் சக்தி வெளிப்படுவதாகவும், மலையின் மூலிகை காற்று பரவுவதால் மனதிற்கு அமைதியும், உடல் நலத்திற்கு நன்மையும் ஏற்படுவதால் பவுர்ணமி அன்று இலட்சக் கணக்கான பக்தர்கள் தங்களது குறைகளை தீர்க்க அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு பின்னர் கிரிவலம் சுற்றி வந்து பலனடைவது இன்றும் நடந்து வருகின்ற சிறப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us