sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டல்களில் 'டிஜே' நிகழ்ச்சி: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை

ஓட்டல்களில் 'டிஜே' நிகழ்ச்சி: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை

ஓட்டல்களில் 'டிஜே' நிகழ்ச்சி: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை


ADDED : ஆக 21, 2025 08:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 08:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிக்குட்டப்பட்ட பகுதிகளில் இயங்கும் ஓட்டல், ரெஸ்ட்டோ பார்களில் டிஜே நிகழ்ச்சி நடத்துபவர்கள் கேளிக்கை வரி செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

நகராட்சி ஆணையர் கந்தசாமி செய்திக்குறிப்பு:

புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஓட்டல், ரெஸ்ட்டோ பார்களில், வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும், ஓட்டல் உள் அரங்குகளில் டிஜே பாடல் நிகழ்ச்சிகள், அனுமதியில்லாமல் நடைபெறுவது நகராட்சிக்கு தெரியவந்துள்ளது.

புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கும் ரெஸ்ட்ரோ பார் மற்றும் உணவகங்களின், உள் அரங்குகளில் கேளிக்கை, டிஜே பாடல் நிகழ்ச்சி நடைபெறுவதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்த கேளிக்கை நிகழ்ச்சியை நடத்துபவர்கள் முறையாக நகராட்சியின் உரிய உரிமம் பெற்று நிகழ்ச்சிகளை நடத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.

முன் அனுமதியின்றி நடத்தும் எந்தவித கேளிக்கை நிகழ்ச்சிகள் பிரிவு எண் 350 மற்றும் 449 நகராட்சி சட்டம் 1973-ன் படி, வணிக உரிமம் மற்றும் கேளிக்கை உரிமம் ரத்து செய்யப்பட்டு, பிரிவு எண்177 மற்றும் 474 (1) ( b)புதுச்சேரி நகராட்சி சட்டம் 1973-ன் படி, விதிகள் மற்றும் துணை விதிகள் படியும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us