/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 03, 2025 12:54 AM

பாகூர் : பாகூர் அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமை ஆசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி வரவேற்றார். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் தேவி, டாக்டர் கவுதம் ஆகியோர் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். பள்ளி வளாகத்தில் இருந்து புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது.
மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பாகூர் நகர வீதியில் ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்னதாக, பள்ளியில் புகையிலை ஒழிப்பு தொடர்பாக ஓவியப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஆசிரியர் சத்தியவதி, பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி, சங்கீதா ரம்யா, செல்வி, கார்த்திகேயன், சிவபாலன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் பிரபாவதி நன்றி கூறினார்.