ADDED : ஏப் 20, 2026 06:32 PM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். கணித பட்டதாரி ஆசிரியை கோமளா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் இரிசப்பன், புகையிலை ஒழிப்பு குறித்து நோக்கவுரையாற்றினார்.
தொடர்ந்து, பள்ளியில் இருந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. இதில், 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, புகையிலைக்கு எதிரான வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தி, முழக்கமிட்டும் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, விழிப்புணர்வு துண்டறிக்கைகளைப் பொதுமக்களுக்கு வழங்கினர்.
ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, தேவி, வனிதா, நான்சி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, வருண், குபேரன், சுகந்தி, அமலா, அருளரசி, அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.
