/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 29, 2025 07:11 AM

திருக்கனுார் : வாதானுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையம் சார்பில் மாணவர்களுக்கான உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் வீரையன் வரவேற்றார். மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மைய பொறுப்பு மருத்துவ அதிகாரி பாலசுப்ரமணியன் தலைமை தாங்கி, புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், புகையிலை பழக்கத்தில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
காசநோய் மக்கள் தொடர்பு அதிகாரி மணிமாறன், பெண் சுகாதார மேற்பார்வையாளர் சகாயமேரி புலோரா, சுகாதார உதவியாளர்கள் ரெமோ, சந்தோஷ், கிராமப்புற செவிலியர் சூரிய பிரியா ஆகியோர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் காசநோய், புற்று நோய்களின் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் வராமல் தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பொற்கலை, சுகாதார ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் செய்திருந்தனர்.