ADDED : அக் 16, 2024 04:33 AM
புதுச்சேரி, : மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை நிகழ்ச்சியையொட்டி, இன்று 108 சுமங்கலி பூஜை நடக்கிறது.
மொரட்டாண்டியில் 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை விழா துவங்கியது.
அதையொட்டி, ஸ்ரீ வித்யா மகா மண்டபத்தில், குரு பூஜை, கோ.பூஜை, வருஷப பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சப்தசதி பாராணயம், மகா லட்சுமி ஹோமம், யோகினி பைரவ பூஜை பலி ஆகியவை நேற்று நடந்தது.
இன்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, விருஷப பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை,கலசம் புறப்பாடு, அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது.
ஹோமம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை, கீதா சங்கர குருக்கள் தலைமையில், நாகராஜ சுவாமிகள், வெங்கடேஷ், சீதாராமன், செந்தில் நாதன், தாரா கணேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.