/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
ADDED : அக் 15, 2024 06:23 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று 15ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லுாரி களுக்கும் இன்று (15ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.