ADDED : ஜூன் 24, 2026 02:43 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முதலியார்பேட்டை, வன்னிய பெருமாள், அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி உற்சவம் இன்று (24ம் தேதி) நடக்கிறது.
உற்சவத்தையொட்டி, காலை 10:00 மணிக்கு கும்பஸ்தாபனம், பூஜை, சுதர்சன மகா மந்திர ஜபம், 10:30 மணிக்கு சுதர்சன சஹஸ்ரநாம, மகாமந்திர ஹோமம், 11:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 12:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக்குழு, விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
