/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை: சுங்கசாவடியில் நாளை முதல் கட்டணம் வசூல்
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை: சுங்கசாவடியில் நாளை முதல் கட்டணம் வசூல்
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை: சுங்கசாவடியில் நாளை முதல் கட்டணம் வசூல்
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை: சுங்கசாவடியில் நாளை முதல் கட்டணம் வசூல்
ADDED : டிச 23, 2025 04:26 AM
பாகூர்: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், சேலியமேட்டில் அமைத்துள்ள சுங்கச் சாவடியில் நாளை 24ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே ரூ.6,431 கோடி செலவில், 194 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 5 ஆண்டிற்கு முன் துவங்கியது. விழுப்புரம் ஜானகிபுரத்தில் தொடங்கும் இச்சாலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், நாகை மாவட்டங்களின் 134 கிராமங்கள் வழியாக செல்கிறது. இச்சாலையை, கடந்த ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
இச்சாலையில், விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையத்திலும், கடலுார் மாவட்டம் கொத்தட்டை மற்றும் நாகை மாவடடத்தில் ஒரு இடத்திலும் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில எல்லைக்குட்பட்ட சேலியமேடு சந்திப்பில், புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடியில் நாளை 24ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு:
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், புதுச்சேரி (29 கி.மீ.) முதல் பூண்டியாங்குப்பம் (67 கி.மீ.) 38 கி.மீ., துார சாலை பயன்படுத்துவதற்கான கட்டணம் நாளை 24ம் தேதி சேலியமேடு சுங்கச்சாவடியில் வசூலிக்கப்பட உள்ளது.

